Header image alt text

IMG_2302விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் நேற்று (30.01.2017) திங்கட்கிழமை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் வவுனியா முருகனூரைச் சேர்ந்த திருமதி லலிதா சிறீபாலன் என்பவரது வீட்டின் கூரையினை வேய்வதற்காக ஒரு தொகுதி கிடுகுகளை வழங்கிவைத்துள்ளனர். குறித்த வீட்டின் கூரைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் தற்போதைய மழையின் காரணமாக அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில் மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவி வழங்கும் நிகழ்வு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரும், வவுனியா மாவட்ட அமைப்பாளருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் தேசிய அமைப்பாளர் த.யோகராஜா, கட்சியின் செயற்குழு உறுப்பினர் சு.காண்டீபன் அகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. Read more

p1லண்டன் நாட்டில் உள்ள PATH TO THE FUTURE (எதிர்காலத்திற்கான பாதை) என்ற அமைப்பினரால் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள உயிரிழை அமைப்பினருக்கு இயன் மருத்துவ சிகிச்சைக்காக physiotherapy bed அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது.

யுத்தத்தினால் கழுத்து மற்றும் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 170 அங்கத்தவர்களை ஒன்றினைத்து செயற்படும் அமைப்பான உயிரிழை அமைப்பு வட்டுக்கோட்டை இந்த வாலிபர் சங்கம் ஊடாக லண்டன் நாட்டில் உள்ள PATH TO THE FUTURE என்ற அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து அவ் அமைப்பினால் இயன் மருத்துவ சிகிச்சைக்கான கட்டில் ஒன்றை லண்டனில் தருவித்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக உயிரிழை அமைப்பின் காரியாலயத்தில் வைத்து அதன் இணைப்பாளர் சிறீகரன் அவர்களிடம் வழங்கி வைக்கபட்டுள்ளது. Read more

image-0-02-06-35ca17b122ce30db5712dbd343075c662b635dc616d7fbe6e3b9838950980dfe-Vகடந்த 1987ஆம் ஆண்டு ஐனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈழத்தை உலுக்கிய முக்கிய சம்பவங்களுள் ஒன்றான கொக்கட்டிச்சோலை படுகொலைக்கு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தன.

அன்று பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி குடிமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டபோது கொக்கட்டிச்சோலை பிரதேசமே இரத்த வெள்ளத்தில் படிந்தது. காலங்கள் எத்தனை கடந்து போனாலும் பிரதேச மக்கள் இப்படுகொலை நடந்த நாளை கரிநாளாக பிரகடனம் செய்து வருடாந்தம் துக்கதினமாக அனுஸ்டித்து வருகின்றனர். Read more

indian trolersமுல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவரினால் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கடற்படையினருக்கு தான் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவுக் கடலிலே இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் பல்வேறு வழியிலான போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நடாத்திய நிலையில் அது சிறிது ஓய்ந்திருந்த இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி மீண்டும் ஆரம்பித்துள்ளது. Read more

bunkersஇறுதிப் போர் நடைபெற்ற புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுள்ள பதுங்கு குழிகளை மூடி, உக்காத பொருட்களை அகற்றித் தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர் காலத்தில் போரில் ஈடுபட்டவர்களினாலும் தற்காப்பைத் தேடிய மக்களினாலும் ஆயிரக்கணக்கான பதுங்கு குழிகள் இந்த பகுதியில் அமைக்கப்பட்டன. அவற்றில் பல இன்றுவரை மூடப்படாமல் இருப்பதன் காரணமாக குறித்த குழிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதன் காரணமாக டெங்கு போன்ற அபாய நோய்கள் ஏற்படுத்தும் வகையில் நுளம்புகளின் பெருக்கம் காணப்படுகின்றது. Read more

swordயாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் மூவரைக் கைது செய்துள்ளதாக, அச்சுவேலிப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, மூவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர், நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி, அச்சுவேலி தெற்குப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ஆவரங்கால் நாவோதயா பகுதியினைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஐவர் படுகாயமடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

NATPITIMUNAகல்முனை, நற்பிட்டிமுனைக் கிராமத்தில் 30 வயதுடைய ஆணொருவரின் சடலம், அவர் வசித்த வீட்டிற்கு அருகிலிருந்த உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து, இன்று மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நற்பிட்டிமுனை, கிட்டங்கி வீதியைச் சேர்ந்த பொன்னுத்துரை தர்மேந்திரா (வயது30) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இவர், நேற்றுப்பகல், தனது 30ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதிலும் நண்பர்களுக்கு விருந்து வைத்துக் களிப்பதிலும் ஈடுபட்டிருந்துள்ளார். Read more

pogala tunnelநேற்று இடம்பெற்ற பாரிய விபத்தொன்றின் காரணமாக, கேகாலையில் அமைந்துள்ள போகல சுரங்க அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுரங்கத்தின் மீது மலையொன்று சரிந்து விழுந்தபோது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தின்போது, போகலப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேராதனைப் பொலிஸார், மேலுதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

jailபூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பூசா தடுப்பு முகாமிலிருந்து தங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் குறித்த இரண்டு அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்களுடைய பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா கணேசபுரத்தைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத்தீவு முல்லியவளையைச் சேர்ந்த ஒருவருமே பூசா தடுப்பு முகாமில் உண்ணாவிதத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more

MP S (2)மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக ஆயித்தியமலை கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட கற்பானைக் கிராமத்தில் அமைந்துள்ள மூன்று சிறிய குளங்கள் நேற்று உடைப்பெடுத்துள்ள நிலையில் நேற்றுமாலை பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் சம்பவ இடத்திற்கு உடன் விரைந்து அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிப்படைந்து அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில் இது குறித்து பா.உ வியாழேந்திரன் அவர்கள் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உட்பட மாவட்ட பிரதேச அதிகாரிகளுடனும் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். கற்பானைக் கிராமத்தில் உள்ள, கற்பானைக்குளம், கற்பானைக் கிராம எல்லையில் உள்ள இன்னும் இரு சிறிய குளங்களுமாகிய மொத்தம் மூன்று குளங்களே அதிகமழை காரணமாக உடைப்பெடுத்துள்ளன. இதனால் ஆயித்தியமலைக்கும், கரடியனாற்றுக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more