இலங்கையின் முன்னைநாள் பிரதமர் அமரர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர்களின் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகள் நேற்று 31.12.2016 சனிக்கிழமை ஹொரணையில் இடம்பெற்றது. இறுதி சடங்கில் மதத் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னைநாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, எதிர்கட்சி தலைவர் இராசவோதயம் சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்ருருந்தனர்.
இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததோடு மறைந்த முன்னைநாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர்களின் புதல்வர் விதுர விக்கிரமநாயக்கவிடம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார். அரமரர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர்களின் பூதவுடல் அன்று பிற்பகல் 1:30 மணியளவில் அவரது ஹொரணை இல்லத்தில் இருந்து ஹொரண பொது விளையாட்டரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டதோடு, அங்கு சமய சடங்ககள் இடம்பெற்று அரச மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Read more