kalvi0பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், நியூ லைன் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும், திருகோணமலை மூதூர் கலைமகள் இந்துக் கல்லூரியின் ஆசிரியருமான திரு சதீஸ்குமார் தலைமையில்  இன்றையதினம்(31/12/2016) மாலை 4.00 மணிக்கு கழகத்தின் மைதானத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு   வெகு சிறப்பாக நடைபெற்றது.

வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட கிராமங்களான கோவில்மோட்டை, சின்னத்தம்பனை, மடுக்குளம், சிவன்நகர், செங்கல்படை, கோவில்புளியங்குளம், வேலங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 86 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இவ் நிகழ்வுகளின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 
கௌரவ அதிதிகளாக மடுக்குளம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் திரு வரதன், வேலங்குளம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் திரு சிவநேசன், மாதர் சங்கங்களின் தலைவி திருமதி குகந்தி, தோணிக்கல் இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் திரு நிதர்சன், மற்றும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் திரு பி.கெர்சோன், கலாசார பிரிவிற்கான தலைவர் திரு தே.பிரகாஷ்கர், உறுப்பினர் திரு ஜெ.கஜுரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
kalvi00 kalvi02 kalvi03 kalvi04 kalvi05 kalvi06 kalvi07 kalvi08 kalvi09 kalvi10 kalvi12 kalvi13 kalvi14 kalvi15 kalvi16 kalvi17 kalvi18 kalvi19
kalvi21