vcvcvcvcvvv“புதியபாதை “ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) 35வது நினைவுதினம் இன்றாகும். 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில் வைத்து விடுதலை புலிகளினால் அரங்கேற்றப்பட்ட முதல் சகோதரப்படுகொலை கட்டவிள்த்து விடப்பட்ட நாளும் இதுவாகும். தோழர் சுந்தரம் அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் விடுதலை மூலமே அடைய முடியும் என்ற கோட்பாட்டுடன் “புதியபாதை” ஊடாக பொதுவுடமை கொள்கைளையும், புரட்சிகர சிந்தனையையும் ஊட்டிய சிறந்த சிந்தனை சிற்பி.
விடுதலை போராட்டம் வெறுமனவே ஆயுதப்போராட்டத்தில் மத்தியில் தங்கியிருக்க முடியாது, மக்களை அரசியல் மயப்பபடுத்தி முழுமையான மக்கள் போராட்டம் மூலமே அடையமுடியும் என்பதில் அசைக்கமுடியாத தன்னம்பிகை;கையை கொண்ட வீரன். தோழர் சுந்தரம் ஊடகவியலாளர், பொதுவுடமைவாதி, சிறந்த இராணுவதளபதி என்ற முற்பரிமாணம் கொண்ட செயல்வீரனாகவே செயலாற்றிய வீரன் ஆகும்.

Read more