ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மற்றும் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கின்ற நிகழ்வு புதுவருட தினத்தற்கு 01.01.2017 முற்பகல் 9மணியளவில் சுன்னாகம் சணச வங்கி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது மேற்படி மாணவர்களுக்காக பணம் வைப்பிலிடப்பட்ட புத்தகங்களும், சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். சணச வங்கியின் வடக்கு கிழக்கு பிராந்திய பொது முகாமையாளர் சிவகுமார், மற்றும் சணச வங்கியின் சுன்னாகம் கிளை முகாமையாளர், யாழ் மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் இரகுநாதன், தென்னிந்திய திருச்சபை சார்பில் அருட்தந்தை பிசப் தியாகராஜா ஆகியோரும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர். அருட்தந்தை தியாகராஜா அவர்கள் ஆசியுரை வழங்கினார்.