Header image alt text

8-3பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் திரு ரஜீவ் தலைமையில் இன்று (07.01.2016) மாலை 5.30மணிக்கு தோணிக்கல் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் திரு நிதர்சன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், 32 தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வுகளின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டிருந்தார். Read more

sithamparapuramவவுனியா, சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபாய் மானியமாகவும் 25 ஆயிரம் ரூபாய் கடனாகவும் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

இந் நிலையில் தாம் தற்போதும் கடனாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி வரும் நிலையில், தம்மால் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் தாம் அவ்வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தற்போது ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களை தமக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். மழைக் காலங்களிலும் வெயில் காலங்களிலும் வானம் தெரியும் கூரையுடன் வசிக்கும் தமக்கு வீட்டுத்திட்டத்தில் வீடுகளை வழங்கவேண்டும் எனவும் அரச அதிகாரிகள், தமது நிலையை உணர்ந்து செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தனர். காலை 7 மணியில் இருந்து சுமார் 4 மணி நேரம் இவ் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

sword-cut-suspectsயாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியிருந்தனர்.

இதனையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்களை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் பொலிஸ் விசாரணையின் பின் நேற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு நீதிவானின் உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்.

sfdfdஇலங்கையும் சீனாவும் இணைந்து முன்னெடுக்கும் ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் இலங்கை – சீன கைத்தொழில் மண்டலத் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த வைபவம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் வருகை தந்தமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது பாதுகாப்புப் பிரிவின் 11 உறுப்பினர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைத்தொழில் மண்டலத் திட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் வைபவம் நடைபெறும் பகுதிக்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு பொலிஸார் முயற்சித்தனர். எனினும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சிலர், கற்களால் தாக்கியதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. Read more

vali north landயாழ். தெல்லிப்பளையில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞான சோதி தெரிவித்தார்.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரமாக எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியை பிரகடனப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார், அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். Read more

sfdfகிளிநொச்சி, கனகபுரம் துயிலும் இல்லத்தில் உரிய அனுமதியைப் பெற்று பொது நினைவுத் தூபியை அமைக்க முடியும் என கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கனகபுரம் துயிலும் இல்லத்தில் பொது நினைவுத் தூபியை அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் 05 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். Read more