img_0651தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில்,

நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் இளையநிலா இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளையர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவுபெற்ற மைதான புனரமைப்பும், கட்டிட புனரமைப்பு என்பவற்றின் திறப்பு விழா இன்று(08.01.2017) ஞாயிற்றுக்கிழமை இளைஞர் சேவை அதிகாரி திரு அஜித் சந்திரசேன தலைமையில் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் திரு செ.மயூரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வினோ, வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவ அதிதிகளாக முன்னாள் செட்டிகுள பிரதேச சபை உறுப்பினர் திரு ஜெகதீஸ்வரன்(சிவம்), இளைஞர் கழக வவுனியா பிரதேச சம்மேளன தலைவர் திரு ரவி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் திரு கமலதாசன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் திரு சந்திரபத்மன்(பாபு) ஆகியோருடன் கிராம மட்ட அமைப்புகளின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

img_0624 img_0630 img_0633 img_0646