வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக எமது புலம்பெயர் உறவான குகபாலன் அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்ல உணவு களஞ்சியத்திற்க்கு 32,000 ரூபா பெறுமதியான 104 பால்மா பைக்கற்றுகளை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளதன் ழூலம் பாரதி இல்ல 108 சிறார்களுக்கான உணவு களஞ்சியத்தில் 40 நாட்களுக்கான பால்மா பைக்கற்றுகளின் இருப்பை உறுதி செய்துள்ளார்.
சிறார்களின் உணவு இருப்பை கருத்தில் கொண்டு இக் கைங்கரியத்தை செய்ய முன் வந்துள்ள புலம்பெயர் உறவான குகபாலன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்கள் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு. இந்து வாலிபர் சங்கம்).