img_0721பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் இன்றையதினம்(08.01.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் நெளுக்குளம் இளையநிலா இளைஞர் கழக மைதானத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இவ் நிகழ்வில், 30 தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அதிதிகளாக வடமாகாண சபை உறுப்பினர் திரு செ.மயூரன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வினோ, முன்னாள் செட்டிகுள பிரதேச சபை உறுப்பினர் திரு ஜெகதீஸ்வரன்(சிவம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக இளைஞர் கழக வவுனியா பிரதேச சம்மேளன தலைவர் திரு ரவி, கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் திரு கமலதாசன், சமூக சேவையாளர் திரு சந்திரபத்மன்(பாபு), வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் திரு பி.கெர்சோன், கலாசார பிரிவிற்கான தலைவர் திரு தே.பிரகாஷ்கர், உறுப்பினர்களான திரு வ.பிரதீபன், திரு ஜெ.கஜுரன் ஆகியோருடன் கிராம மட்ட அமைப்புகளின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

img_0701 img_0709 img_0710 img_0712 img_0718 img_0729 img_0721