Header image alt text

Northern Politicos Not Happy

Posted by plotenewseditor on 10 January 2017
Posted in செய்திகள் 

Northern Politicos Not Happy  (by  Roshani Nathaniel)

Sampanthan, Sidharthan and Suresh Premechandran

sampanthan-sithdthan-sureshThe Tamils in the North played a pivotal role in the change of regime and they expected their burning issues, mainly the resettlement, releasing of political prisoners and reduction of the military presence in the North to be fulfilled. Some election promises have been partially activated but according to the Northern people the majority of their expectations have not been fulfilled.

The Tamils in the North are also rather disgruntled with their elected leaders and feel that their issues have been neglected for political gain. According to TNA member Suresh Premachandran the government process is very slow and still the armed forces are holding onto the private lands and still the people cannot return to their own area. “The government used to say that once Maithripala Sirisena takes over as the President about 4,000 acres of land from the North including Trincomalee has been returned. However, according to the Chief Minister’s estimation about 67,000 acres of land is being held by the armed forces. More than half of that land belongs to private people. This is the biggest problem as far as the Tamils are concerned,” he said. Read more

ploteகழகத்தின் எட்டாவது மகாநாட்டு தீர்மானத்திற்கு அமைய கழகத்தின் கனடா கிளையினுடைய புதிய நிர்வாகக்குழு கடந்த 18.10.2016 அன்று ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி பின்வருவோர் கனடா கிளையின் நிர்வாக சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர்                 –  திரு. நவரத்தினம் – பரதன்(சாரங்கன்)
செயலாளர்             –  திரு. ஆனந்தசங்கரி – ஜெயசங்கரி
நிதிபொறுப்பாளர் –  திரு. சாள்ஸ் ஆனந்தகுமார்(ஜோசப்)
உபதலைவர்/தொடர்பாளர் – திரு. முருகேசு கணேசதாசன்(செல்வம்)
மக்கள் தொடர்பு  –  திரு. கணேஸ் மணிவண்ணன்,
திரு. சிவசோதி யோகராஜா(அப்பன்), திரு. சுப்பிரமணியம் ரவிந்திரன்(ரவி) Read more

p1410154தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்;தாபகர்களுள் ஒருவரும், புதியபாதை ஆசிரியருமான தோழர். சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்களின் 35ஆவது ஆண்டு நினைவுதினம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் கௌதமன் அவர்களது தலைமையில் 04.01.2017 புதன்கிழமை சுழிபுரத்தில் நடைபெற்றது. இதன்போது சுந்தரம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், விடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்களில் சுந்தரம் ஒரு முன்னணித் தோழராக எங்களுடைய தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய மூத்த தோழராக திகழ்ந்திருக்கின்றார். அவருடைய இராணுவ திறமையும், வெளிப்பாடுகளும், அரசியல் ரீதியாக அவருக்கு இருந்த சிந்தனைகளும், தமிழ் மக்களுடைய விடுதலை சம்பந்தமாக அவருக்கு இருந்த தெளிவான ஒரு பார்வையும் தான் அவர் கொல்லப்படுவதற்கு காரணியாக அமைந்தது.
Read more

sdfsdds1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 43ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

43ஆவது ஆண்டு நினைவு தினமாகிய இன்று யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றுகாலை 9.00அளவில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்தார். Read more

p1410112யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலம் பாரதி சனசமூக நிலையத்தில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேற்படி சனசமூக நிலையத்திற்கு ஒரு தொகை கதிரைகளை வழங்கியமைக்காகவும்,

வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்கள் குறித்த சனசமூக நிலையத்திற்கான மின்சார விளக்குகளை வழங்கியமைக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக இந்நிகழ்வு நடைபெற்றது. பாரதி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. கணேசலிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. கணேசவேல் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் ஊர்ப் பெரியவர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

vimalவாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்றுமுற்பகல் ஆஜராகியிருந்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவங்ச நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக பதவி வகித்தவேளை, அந்த அமைச்சிற்கு சொந்தமான வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முன்னதாகவும் சில சந்தர்ப்பங்களில் அவர் இவ்வாறு வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து விசாரணைகளுக்காக இன்று காலையில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் சென்றிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார். Read more

priyanga-jayakodyபொலிஸ் ஊடகப் பேச்சாளராக இன்றுமுதல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாகவும் சில தடவைகள் அப் பதவியில் இருந்தவர். சட்டம் மற்றும் அமைதி தொடர்பான அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸ் பிரிவுகள் 42க்கு ஊடக இணைப்பு அதிகாரிகள் 42 பேர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் காலங்களில் காலை 06.00, 11.00 மற்றும் மாலை 05.00 மணி ஆகிய நேரங்களில் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தினால் ஊடக அறிக்கைகள் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

swordயாழ். கல்வியங்காடு பகுதியில் இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர், வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிசென்ற சம்பவம், நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள புலவனார் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர், நேற்று இரவு அவ்வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த அறுவர் அடங்கிய குழு, இளைஞரை வழி மறித்துத் தாக்கியுள்ளனர். தாக்குதலாளிகளிடமிருந்து தப்பித்த இளைஞர், விளையாட்டரங்கு வீதி வழியாக தப்பியோடிவேளை, தாக்குதலாளிகள் குறித்த இளைஞனைத் துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளனர். Read more