யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலம் பாரதி சனசமூக நிலையத்தில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேற்படி சனசமூக நிலையத்திற்கு ஒரு தொகை கதிரைகளை வழங்கியமைக்காகவும்,
வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்கள் குறித்த சனசமூக நிலையத்திற்கான மின்சார விளக்குகளை வழங்கியமைக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக இந்நிகழ்வு நடைபெற்றது. பாரதி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. கணேசலிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. கணேசவேல் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் ஊர்ப் பெரியவர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.