priyanga-jayakodyபொலிஸ் ஊடகப் பேச்சாளராக இன்றுமுதல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாகவும் சில தடவைகள் அப் பதவியில் இருந்தவர். சட்டம் மற்றும் அமைதி தொடர்பான அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸ் பிரிவுகள் 42க்கு ஊடக இணைப்பு அதிகாரிகள் 42 பேர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் காலங்களில் காலை 06.00, 11.00 மற்றும் மாலை 05.00 மணி ஆகிய நேரங்களில் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தினால் ஊடக அறிக்கைகள் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை முழுவதும் மொத்தமாக 600 பொலிஸ் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். சிவில் பாதுகாப்பு சம்பந்தமான ஒருங்கினைப்புக்குழுக்கூட்டம் இன்று யாழ் கச்சேரி கேட்போர் கூடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதிப்பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் போதியளவு பொலிஸ் நிலையங்களோ, பொலிஸாரோ காணப்படவில்லை என்பதால் மேலும் பொலிஸ் நிலையங்களை திறக்க வேண்டியுள்ளது. இதன் முதல் கட்டமாக இவ்வருடம் 130 பொலிஸ் நிலையங்கள் திறக்கவுள்ளோம் .தற்போது நாட்டில் 470 பொலிஸ் நிலையங்கள் உள்ளன. எனவே மொத்தமாக 600 பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளன. யாழ் மாவட்டத்தை பொறுத்த வரையில் காரைநகரில் பொலிஸ் நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். எனவும் அவர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகம் , யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கணேசராஜா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், எதிர் கட்சி தலைவர் தவராசா, மற்றும் சிவில் சமுகத்தினர் போன்றோர் பங்குபற்றினர்

விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களில் ஸ்ரிக்கர் விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களில் ஸ்ரிக்கர் யாழில் ஏற்பட்டுவரும் விபத்துக்களை தடுக்கும் வகையில் உளவு இயந்திரங்களில் பின்பகுதியில் ஸ்ரிக்கர் ஒட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சீரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்துள்ளார்.

இரவு நேரங்களில் பயணிக்கும் உளவு இயந்திரங்கள், சிறிய ரக உலவு இயந்திரங்களை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் இயந்திரங்களின் பின்பக்கங்களில் ஸ்ரிக்கர் அல்லது விளக்குகள் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிவில் சமுகத்தினர் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும்போதே யாழ் மாவட்ட சீரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது இவ்விதமிருக்க சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 2477 பேர் இன்று முதல் பொலிஸ் திணைக்களத்துடன் இணையவுள்ளனர். பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார். இதன்படி, தற்போது பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்துள்ள சிவில் பாதுகாப்பு படையின் உறுப்பினர்கள் 3500 வரையுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.