vimalவாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்றுமுற்பகல் ஆஜராகியிருந்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவங்ச நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக பதவி வகித்தவேளை, அந்த அமைச்சிற்கு சொந்தமான வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முன்னதாகவும் சில சந்தர்ப்பங்களில் அவர் இவ்வாறு வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து விசாரணைகளுக்காக இன்று காலையில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் சென்றிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட விமல் வீரவங்ச நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, எதிர்வரும் 24ம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை விமல் வீரவன்ச கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு முன்பதாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.