Header image alt text

p1410161யாழ். நீர்வேலி இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் வேலுப்பிளை நினைவு மண்டப திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் அண்மையில் நடைபெற்றது. வித்தியாலக முதல்வர் திரு. இரவீந்திரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக நா.சிவநேசன் (கேட்டக்கல்வி பணிப்பாளர், கோப்பாய்), வைத்தியக்கலாநிதி விபுலன் வைத்தியக்கலாநிதி திருமதி மகிழினி விபுலன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக இராசநாயகம் (ஓய்வுபெற்ற வங்கியாளர் இலங்கை வங்கி), கிருபாகரன் (அதிபர் கிருபா லேணர்ஸ்), திரு. குமாரகோகுலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

mangalaபிரித்தானியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளர் போரிஸ் ஜோன்சனை சந்தித்துள்ளார்.

லண்டனிலுள்ள பொதுநலவாய அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாக இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளருக்கு விளக்கிக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

jaliya-wickramasuriyaஅமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சுகயீனம் காணரமாக ஜாலிய விக்கிரமசூரிய இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும், சிறைச்சாலை அதிகாரிகளினால் வைத்திய அறிக்கை நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. Read more

ravirajமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஷேட ஜூரிகள் சபையில் மேல் நீதிமன்ற நீதிபதியினால் வழக்கு தொடர்பான சட்ட விளக்கங்கள் போதுமான அளவு தெளிவுபடுத்தப்படவில்லை என்று சட்டமா அதிபரின் மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதி குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதுடன், பிரதிவாதிகளான 05 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

name-boardஇராஜகிரிய வெலிக்கடைப் பகுதியில், அரசகரும மொழியை மீறும் வகையில் வீதிக் குறியீட்டு பலகையானது ஆங்கிலம், சிங்கள மொழியில் மாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக, அரச மொழிக் கொள்கையை பலப்படுத்தும் இயக்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இதற்கு முன்னர், சிங்களமொழியில் மாத்திரம் பொறிக்கப்பட்டிருந்தது, அதன்பின்னர், எமது அமைப்பினால் வீதி அதிகார அபிவிருத்தி சபைக்கும் அரச கரும மொழிப்பலப்படுத்தும் இயக்கத்துக்கும் 2017 ஜனவரி 4ஆம் திகதி கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவ்விடயம், தொடர்பில் சரியான தீர்வு கிடைக்கவில்லை. Read more

chandrikaநல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவையை, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நிராகரித்தமை பிழையானது என்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். Read more

vavuniyaவடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இன்று காலை காணாமல் போனோரின் உறவினர்கள் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கும் மேல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது காணாமல் போனோரின் உறவினர்களினால் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் புகைப்படம் எரிக்கப்பட்டது. இச்செயலை வடமாகாண சுகாதார அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தவர்கள் விசமிகள் என தெரிவித்தமையால் இன்று அமைச்சருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more