யாழ். நீர்வேலி இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் வேலுப்பிளை நினைவு மண்டப திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் அண்மையில் நடைபெற்றது. வித்தியாலக முதல்வர் திரு. இரவீந்திரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக நா.சிவநேசன் (கேட்டக்கல்வி பணிப்பாளர், கோப்பாய்), வைத்தியக்கலாநிதி விபுலன் வைத்தியக்கலாநிதி திருமதி மகிழினி விபுலன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக இராசநாயகம் (ஓய்வுபெற்ற வங்கியாளர் இலங்கை வங்கி), கிருபாகரன் (அதிபர் கிருபா லேணர்ஸ்), திரு. குமாரகோகுலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியிலும், பரோபகாரிகளின் உதவியிலும் கட்டிமுடிக்கப்பட்ட வேலுப்பிள்ளை மண்டபம் இதன்போது திறந்து வைக்கப்பட்டது. ஆசியுரையினை மணி ஐயர் அவர்களும் தியாகராஜா ஐயர் அவர்களும் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.