முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஷேட ஜூரிகள் சபையில் மேல் நீதிமன்ற நீதிபதியினால் வழக்கு தொடர்பான சட்ட விளக்கங்கள் போதுமான அளவு தெளிவுபடுத்தப்படவில்லை என்று சட்டமா அதிபரின் மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதி குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதுடன், பிரதிவாதிகளான 05 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.