jaliya-wickramasuriyaஅமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சுகயீனம் காணரமாக ஜாலிய விக்கிரமசூரிய இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும், சிறைச்சாலை அதிகாரிகளினால் வைத்திய அறிக்கை நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்திற்காக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்றவகையில் கையாண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கடந்த நொவெம்பர் மாதம் 18ஆம் திகதி பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவினால் ஜாலிய விக்கிரமசூரிய கைது செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.