மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மயிலத்தமடு, மாதவணைப் பகுதியில் வைத்து மூன்று தமிழ் பண்ணையாளர்களை பிக்குமார் தாக்கிய சம்பவ இடத்திற்கு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சென்றிருந்தார்.
இதன்போது தாக்குதலுக்குள்ளான பண்ணையாளர்கள் உட்பட குறித்த பகுதியிலுள்ள பண்ணையாளர்களை சந்தித்ததுடன், சம்பவத்தையும் கேட்டறிந்து கொண்டார். இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இருந்து மயிலத்தமடு, மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மாடுகளை துப்பாக்கியால் சுடுவது, கால்நடைகளை கடத்துவது, பெரும்பான்மை இனத்தவரினால் தமிழ் பண்ணையாளர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து கொண்டுடிருக்கின்றது. Read more