champika ranawakaநல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை நிராகரித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இந்த அறிக்கை குப்பைக் கூடைக்குள் வீசப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகள், தேசிய நலனுக்கும், இன நல்லிணக்கத்துக்கும் விரோதமானவை. செயலணியின் பரிந்துரைகளின் மூலம், போர்க்குற்றங்களுக்காக எமது போர் வீரர்களையும், அரசியல் தலைவர்களையும், விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை அனுப்ப ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் முயற்சிக்கக் கூடும். மகிந்த ராஜபக்ச 12,600 புலிகளை போர்க்குற்றங்களுக்காக தண்டிக்காமல் விடுவித்தமை பாரிய தவறாகும். செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால்,எஞ்சியுள்ள புலிகளுக்கும் அவர்களின் அனுதாபிகளுக்குமே நன்மையளிப்பதாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.