தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “youth got talent” மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில், காத்தார் சின்னக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உதயதாரகை இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவுபெற்ற மைதான புனரமைப்பு திறப்பு விழா அண்மையில் உதயதாரகை இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.அருண்குமார் தலைமையில் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வின் அதிதிகளாக வட மாகாண சபை உறுப்பினர் திரு செ.மயூரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் சேவை அதிகாரி திரு அஜித் சந்திரசேன, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ், இளைஞர் கழக வவுனியா பிரதேச சம்மேளன தலைவர் திரு ரவி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், ரெலோ அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் திரு.புரூஸ் மற்றும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் திரு பி.கெர்சோன், கலாசார பிரிவிற்கான தலைவர் திரு தே.பிரகாஷ்கர், உறுப்பினர் கணேசலிங்கம் மாறன் ஆகியோருடன் கிராம மட்ட அமைப்புகளின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.