Header image alt text

ezhuka thamizhமட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (21.01.2017) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை இந்நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கே.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். Read more

europ1இலங்கை கைச்சாத்திட்டுள்ள 27 சர்வதேச கொள்கைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தியமைக்காகவே இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எனினும், 58 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைளை வழங்குவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது. நீணடகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைளை இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக கடந்த 11 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

manatungaதேசிய காவற்துறை ஆணைக்குழுவின் தலைவராக பீ.எச் மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் காவற்துறை ஆணைக்குழுவின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பேராசிரியர் எஸ்.ஜீ ஹெட்டிகே பதவி விலகியதை தொடர்ந்து தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. பின்னர் ஆணைக்குழுவின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியான பீஎச் மனதுங்கவை குறித்த பதவிக்கு நியமிக்க அரசியலமைப்பு சபையால் தீர்மானிக்கப்பட்டு அது ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்து.

ananthi sasitharanயுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கம் உரிய பதிலளிக்காவிடில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22ம் திகதி முதல் தான் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், பாதுகாப்பு தரப்பிடம் சரணடைந்த தனது கணவர் உள்ளிட்ட குழுவினர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை எனவும் அனந்தி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

china president and ranilஇலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று உலக பொருளாதார மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு முன்னதாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையில், சீனாவின் முதலீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்பாந்தோட்டை துறைமுகம், கைத்தொழில் முதலீட்டு வலயம் மற்றும், கொழும்பு நிதி நகரத் திட்டம் என்பன தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும், சீன அதிபருடன் இலங்கை பிரதமர் பேச்சு நடத்திய அதேவேளை எதிர்கால முதலீடுகள் தொடர்பாகவும், Read more

policeபதில் பொலிஸ்மா அதிபராக பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இன்று நேபாளுக்கு சென்றுள்ளதால் பதில் பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கத்மாண்டு நகரில் இடம்பெறவுள்ள ஆசிய வலய பொலிஸ் பிரதானிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேபாளம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

dfdவஸ்கமுவ தேசிய பூங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில், 38 வயதுடைய நபரொருவர் பலியாகியுள்ளார். வனவிலங்கு அதிகார சபை அதிகாரிகளுக்கும், வேட்டையாடுபவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போதே, குறித்த நபர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, வனவிலங்கு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, வேட்டையாடுபவர்களுடன் தொடர்பை பேணி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், வனவிலங்கு அதிகாரியொருவரும் கைது செய்யப்பட்டார். Read more

ezhuka thamilகிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையினால் தமிழர் தேசம், பிரிக்கப்படாத வட- கிழக்கு தமிழர் தாயகம், இறைமை, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணியில் பங்குபெற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

மேலும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் இந்த எழுக தமிழ் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது. இச் சந்தர்ப்பத்தில் வடக்குக் கிழக்கு மக்களின் ஒன்றித்த குரலாக இப்பேரணி அமைய வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். Read more

dsfdவவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணி இராணுத்தால் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் இக்காணின் உரிமையாளர்கள் தொடச்சியாக தமது காணிகளை மீள் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 22 ஏக்கர் காணியை இராணுவம் கையளித்துள்ளது.

மிகுதி 2 ஏக்கர் காணி இராணுவ வசமுள்ளது. கடந்த யுத்த காலத்தில் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இப்பகுதி 60 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டிருந்தது. Read more