இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஏற்படுத்தப்பட்ட சாதகமான படிமுறைகளை சுவிட்ஸர்லாந்து வரவேற்றுள்ளது. ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதி பூபிஸ் லொய்ட்காட் தெரிவித்துள்ளார்.
டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இந்த கருத்துக்களைக் கூறியுள்ளார். இதுவரை இலங்கைக்கு சுவிட்ஸர்லாந்து வழங்கிய உதவிகளுக்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின், முதலீட்டு மாநாடு விரைவில் சுவிட்ஸர்லாந்தில் நடத்தப்படும் எனவும் பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.