பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் எரிக் சொல்ஹேம் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிஸர்லாந்து சென்றுள்ள பிரதமர், உலக பொருளாதார மாநாட்டு மத்திய நிலையத்தில் வைத்து சொல்ஹேமை சந்தித்துள்ளார். இலங்கையில் பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை நிதி சூழலை உறுவாக்குவது தொடர்பில் நிபுணர்களின் அறிவுரையை பெற்றுக் கொள்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.