நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் தகவலளிக்குமாறு, லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவுக்கு உயர்நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியான செய்தியினால் நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாக குற்றம்சாட்டி, சட்டத்தரணி மயுர விதானகே மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த மனுவை தொடர்ந்தும் விசாரிக்க பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என இதன்போது நீதவான் பிரியசாத் டெப் குறிப்பிட்டார். இதற்கமைய சந்தருவனுக்கு எதிர்வரும் மார்ச் 3ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.