யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸாரில் 150பேர் இம்மாதம் இடமாற்றம்பெற்றுச் சென்றுள்ளனர். யாழ் பொலிஸ் நிலையத்தில் 500க்கு மேற்பட்ட பொலிஸார் கடமையிலிருந்து வருகின்றனர். இவர்களில் 150பேர் திடீர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர்.
இவர்கள் இம்மாதம் 18ஆம் திகதி வௌ;வேறு இடங்களுக்கு கடமைக்காக சென்றுள்ளனர். அதேவேளை யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதத்தில் விசேட பொலிஸ் பிரிவினர் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளதாக யாழ் பொலிஸார் கூறியுள்ளனர்.