sfdயாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இன்றுகாலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியின் தாக்கம்,வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் கமநல அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து திணைக்கள அதிகாரிகள், அமைச்சர்களின் ஊடாக ஏனையோருக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அத்துடன் திணைக்களங்களின் 2017ம் ஆண்டிற்கான புதிய திட்டங்கள்,திட்டங்களை நிறைவேற்றல் தொடர்பான பிரச்சனைகள் என்பன கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. நிகழ்வில் சிறுவர் மகளிர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடக்கு மாகாண சபை பதில் முதல்வரும் அமைச்சருமான பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வடமாகாணசபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம்,

எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலர்கள், விவசாய, கமநல, நீர்ப்பாசன, கால்நடை, மீன்பிடி,பனை அபிவிருத்தி போன்ற திணைக்களங்களின் யாழ் மாவட்ட பொறுப்பதிகாரிகள் பிரதிநிதிகள், தலைவர்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.