passportஉலகளாவிய ரீதியில் இலங்கையின் கடவுச்சீட்டு 93ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 193 ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் உட்பட 199 நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் தாய்வான், மக்கோவ், கொங்கொங், பலஸ்தீனம், கொசோவா, வத்திக்கான் ஆகிய ஆறு நாடுகளே உறுப்புரிமை அற்ற நாடுகளாகும். ஜேர்மனி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளதுடன், 158 நாடுகள் ஜேர்மன் பிரஜைகளுக்கு வீசா அற்ற பயண அனுமதியை வழங்கியுள்ளன. எனினும் இலங்கை பிரஜைகளுக்கு 35 நாடுகளே வீசா அற்ற பயண அனுமதியை வழங்கியுள்ளதாக கடவுச்சீட்டு சுட்டெண்ணில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுவிடன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தையும், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன், சுவிட்ஸ ர்லாந்து, நோர்வே, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.