ranil pakistanஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு விரைவாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அணுக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் டாவோஸ் நகரில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவினை வலுப்படுத்துவதற்காக பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நவாஸ் செரிப் இதன்போது பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தெற்காசியவில் சமாதானம் மற்றும் உறுதிப்பாட்டினையும் உறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பும் தேவையென சுட்டிக்காட்டிய இருநாட்டு பிரதமர்கள், தீவிரவாதம் மற்றும் வறுமையையும் ஒழித்தல் தொடர்பில் முக்கிய பங்கினை வகிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை தூக்கி நிறுத்தம் வேலைத் திட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப்பிற்கு விளக்கமளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.