sdfdfdfவவுனியாவின் ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன, “ஓமந்தை இராணுவமுகாம் அகற்றப்படவில்லை.

ஓமந்தை இராணுவ முகாமை படையினர் கைவிட்டு வெளியேறினர் என்பது தவறான செய்தி. இராணுவ முகாமுடன் இணைந்திருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணிகளை மாத்திரம், வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி காணிகள் தொடர்பாக பிரச்சினைகள் இருக்கின்றன, அதனை எம்மால் தீர்த்து வைக்க முடியாது. அதனால், தனியார் காணிகள் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார்.