Header image alt text

chandruwan senatheeraநீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் தகவலளிக்குமாறு, லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவுக்கு உயர்நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியான செய்தியினால் நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாக குற்றம்சாட்டி, சட்டத்தரணி மயுர விதானகே மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read more

jaffna new police stationயாழ். பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸாரில் 150பேர் இம்மாதம் இடமாற்றம்பெற்றுச் சென்றுள்ளனர். யாழ் பொலிஸ் நிலையத்தில் 500க்கு மேற்பட்ட பொலிஸார் கடமையிலிருந்து வருகின்றனர். இவர்களில் 150பேர் திடீர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர்.

இவர்கள் இம்மாதம் 18ஆம் திகதி வௌ;வேறு இடங்களுக்கு கடமைக்காக சென்றுள்ளனர். அதேவேளை யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதத்தில் விசேட பொலிஸ் பிரிவினர் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளதாக யாழ் பொலிஸார் கூறியுள்ளனர்.

sfdயாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இன்றுகாலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியின் தாக்கம்,வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் கமநல அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து திணைக்கள அதிகாரிகள், அமைச்சர்களின் ஊடாக ஏனையோருக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அத்துடன் திணைக்களங்களின் 2017ம் ஆண்டிற்கான புதிய திட்டங்கள்,திட்டங்களை நிறைவேற்றல் தொடர்பான பிரச்சனைகள் என்பன கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. Read more

yarl deviயாழ். மல்லாகம் உப ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில்மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு காயமடைந்த நபர் குறித்த ரயிலின் ஓட்டுநரான டி.எம்.தர்மசேன (வயது 47) எனத் தெரியவந்துள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மீதே இவ்வாறு, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுநர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

passportஉலகளாவிய ரீதியில் இலங்கையின் கடவுச்சீட்டு 93ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 193 ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் உட்பட 199 நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் தாய்வான், மக்கோவ், கொங்கொங், பலஸ்தீனம், கொசோவா, வத்திக்கான் ஆகிய ஆறு நாடுகளே உறுப்புரிமை அற்ற நாடுகளாகும். ஜேர்மனி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளதுடன், 158 நாடுகள் ஜேர்மன் பிரஜைகளுக்கு வீசா அற்ற பயண அனுமதியை வழங்கியுள்ளன. எனினும் இலங்கை பிரஜைகளுக்கு 35 நாடுகளே வீசா அற்ற பயண அனுமதியை வழங்கியுள்ளதாக கடவுச்சீட்டு சுட்டெண்ணில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

sdfdfdfவவுனியாவின் ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன, “ஓமந்தை இராணுவமுகாம் அகற்றப்படவில்லை.

ஓமந்தை இராணுவ முகாமை படையினர் கைவிட்டு வெளியேறினர் என்பது தவறான செய்தி. இராணுவ முகாமுடன் இணைந்திருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணிகளை மாத்திரம், வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி காணிகள் தொடர்பாக பிரச்சினைகள் இருக்கின்றன, அதனை எம்மால் தீர்த்து வைக்க முடியாது. அதனால், தனியார் காணிகள் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார்.