Header image alt text

al hussainஇலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்களுக்காக தான் மகிழ்ச்சி தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சைய்த் அல் ஹ_சைன் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் மற்றும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்களின் நிலையானதாக முன்னெடுத்துச் செல்வது ஐ.நா மனித உரிமை பேரவையின் எதிர்பார்ப்பாகும் என்று அவர் கூறியுள்ளார். சுவிஸ் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினரை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. Read more

cv vigneswaranஅதிகாரபகிர்வு எவ்வாறு நாட்டிற்கு நன்மைகளைப் பயக்கும் என்பது பற்றி பல்கலைக்கழகங்களிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டங்களை மேற்கொண்டால், வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகரிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் போல் மற்றும் அவரது பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு முதமைச்சர் கருத்து தெரிவிக்கையில், Read more

newzealandசுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்து நியூசிலாந்தும் இலங்கையும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டொட் மெக்லேவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டின் இடையே நடத்தப்பட்ட சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் வர்த்தக விடயங்களில் சில பொருத்தப்பாடுகள் காணப்படுவதாகவும் இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதனால் இரு நாடுகளுக்கும் நன்மை ஏற்படும் எனவும் நியூசிலாந்து அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

vvvvvசுவிட்ஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உலக பொருளாதார மாநாட்டு மத்திய நிலையத்தில் உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கோசினுடன் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கை முகம்கொடுக்கக் கூடிய வறட்சியான காலநிலையால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் சிரமங்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. Read more

ddsdddsகனடா நாட்டில் வசிக்கும் ஜெயசுந்தர் கலைவாணி தமபதிகளின் 10வது திருமண ஆண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 27 சிறார்களுக்கு 30,000 ரூபா பெறுமதியான புத்தாடைகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாரதி பெண்கள் சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது. அவர்களது விண்ணப்பதில் தெரிவித்ததாவது, Read more

neduntharakaiயாழ். நெடுந்தீவுக்கான நெடுந்தாரகை படகுச்சேவை இன்றுமுதல் குறிகாட்டுவானிலிருந்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், Read more

alibabaஉலகின் மிகப் பிரபலமான சீன இணைய வணிக நிறுவனமான அலிபாபா, இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. டாவோசில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில், அலிபாபா நிறுவனத்தின் தலைவரான ஜாக் மாவை, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போதே, இலங்கையில் முதலீடு செய்வதற்கான உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்கப் போவதாக, அலிபாபாவின் தலைவர் ஜாக் மா தெரிவித்துள்ளார். தமது முதலீட்டு திட்டம், நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

indian navy navஇந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்றையதினம் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து இலங்கை கடற்படை இரண்டு ஆழ்கடல் ரோந்துப் படகுகளைக் கொள்வனவு செய்துள்ளது. Read more

american shipஅமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அமெரிக்க நாசகாரி கப்பலுக்கு, கொழும்புத் துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது.

விமான எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, மற்றும் தரை இலக்குகளைத் தாக்கும் பலநோக்கு போராயுத வசதிகளைக் கொண்ட இந்த நாசகாரி கப்பல், பேர்ள் ஹாபரிலிருந்து இயங்கி வருகிறது. தற்போது இந்த நாசகாரி, இந்தோ-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. Read more

accident (3)கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு பரந்தன் பகுதியிலிருந்து புளியம்பொக்கணையில் அமைந்துள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன்மீது, எதிர்த் திசையில் மணல் ஏற்றி வந்த லொறி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பணித்த அவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புளியம்பொக்கனை கண்டாவளையை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் என்ற 24வயதுடைய இளைஞரே இதன்போது பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்