al hussainஇலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்களுக்காக தான் மகிழ்ச்சி தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சைய்த் அல் ஹ_சைன் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் மற்றும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்களின் நிலையானதாக முன்னெடுத்துச் செல்வது ஐ.நா மனித உரிமை பேரவையின் எதிர்பார்ப்பாகும் என்று அவர் கூறியுள்ளார். சுவிஸ் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினரை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் இதயங்களின் காயங்களை ஆற்றுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியிருப்பது முக்கியமான விடயம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மக்களினதும் உரிமைகளையும் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் ரணில் இதன்போது கூறியுள்ளார்.