அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்வின் கொலை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்று சுமார் 5 மணித்தியாலங்கள் வரை குற்றப் புலனாய்வுப் பிரவினர் சரத் பொன்சேகாவிடம் இவ்வாறு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.