மட்டக்களப்பு, நொச்சிமுனையைச் சேர்ந்த 35 வயதுடைய சுஜிதா தவசீலன் என்ற இளம் குடும்பப் பெண்ணைக் கடந்த இரு தினங்களாகக் காணவில்லை என, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று விட்டு வீடு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த வேளையிலேயே, இவர் காணாமல் போயுள்ளதாக, உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்த இவருடைய அலைபேசி, வியாழக்கிழமை இரவு 8 மணிவரையில் இயங்கியதாகவும் அதன் பின்னர் இயங்கவில்லை என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.