தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “Youth Got Talent – 2016” மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில், பூவரசன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் பூவரசு இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளையர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவுபெற்ற மைதான சுற்றுவேலி, கடினபந்து துடுப்பாட்ட ஆடுகள நிர்மாணம் என்பவற்றின் திறப்பு விழா பூவரசன்குளம் மகா வித்தியாலய அதிபர் தலைமையில் பூவரசு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாணசபை உறுப்பினர் திரு செ.மயூரன் அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வினோ நோகராதலிங்கம், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), ஜனாதிபதியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு வாசலை, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் மற்றும் தேசிய ஒதுக்கீட்டின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு வாசலை பசிந்து ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவ அதிதிகளாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ், இளைஞர் கழக வவுனியா பிரதேச சம்மேளன தலைவர் திரு ரவி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் திரு சந்திரபத்மன்(பாபு), பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஆகியோருடன் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.