Header image alt text

asdsdsகாணாமல் போனோரின் உறவினர்கள், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை வவுனியாவில் ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை முன்வைத்து இடம்பெற்று வரும் இப்போராட்டம், வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளுடன் நேற்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. Read more

bombகிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் இருந்து இனந்தெரியாத வெடிபொருள் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து அதனை மீட்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

protest (1)கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை வவுனியாவில் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில், திருகோணமலையிலும் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து மேற்படி உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். Read more

accident (2)கொழும்பு- கண்டி பிரதான வீதியின், நிட்டம்புவ, பஸ்யால பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளதோடு 35பேர் படுகாயடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸொன்றும் கன்டர் ரக லொறியொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த பஸ்ஸில் பயணித்த இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள், வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, ஆட்டோ ஒன்று சேதமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

kilinochchi schoolமுல்லைத்தீவு விஸ்வமடு விஸ்வநாதர் வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள, வளாகத்திலிருந்த குளவிக்கூடு இன்று கலைந்து, கொட்டியதில் 46பேர் பாதிக்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு விஸ்வமடு மகா வித்தியாலயத்திற்கும் விசுவநாதர் ஆரம்வித்தியாலயத்திற்கும் இடையில் உள்ள மரத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கடுமையான காற்றுக்காரணமாக கலைந்து, விசுவநாதர் ஆரம்வித்தியாலய 30 மாணவர்கள் உட்பட 5 ஆசிரியர்கள் மற்றும் விஸ்வமடு மகா வித்தியாலய 9 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். Read more

sfdfdயாழ். மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவால் திறந்துவைக்கப்படவுள்ளது.

வடபகுதி மக்கள் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு இதுவரை காலமும் கொழும்புக்குச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

ranil al hussainசுவிட்ஸர்லாந்து, டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் அல் ஹ_சைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் கலந்துகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

assdaகிளிநொச்சி உருத்திரபுரம் காந்தி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காந்தி சிறுவர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்கள் 14 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவர்கள் தமக்கு கல்வி கற்க விருப்பம் இல்லை எனவும், கல்வி கற்குமாறு தம்மை கட்டாயப்படுத்த வேண்டாம் எனவும் காந்தி சிறுவர் இல்லத்தினரிடம் தெரிவித்துள்ளனர். Read more