Header image alt text

sasaகாணாமற்போனோரின் உறவினர்களால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடும் மழை மற்றும் குளிருக்கு மத்தியில் 14பேர் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காணாமற்போன தங்களின் உறவுகள் தொடர்பில் இறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more

anurathapuram-jailகாணாமற்போனோரின் உறவினர்களால், வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும், இன்றுகாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 19 பேரும், கொழும்பு மெகசின் சிறைச்சாலையைச் சேர்ந்த 54பேருமே இந்த உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

ananthiநல்லாட்சி அரசாங்கமானது, தமிழ் மக்கள் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றாது தொடர்ந்தும் இழுத்தடித்து ஏமாற்றி வருவதால், நல்லாட்சி அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்ற ஆதரவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில், ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள், தங்களுடைய பிரச்சினைகள் குறித்துப் பேசுவார்கள். தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளை அளித்து, அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். Read more

ananthiயாழ். ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், விரைவான விசாரணையை நடாத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமாறு கோரி, நாளை ஒரு மணிநேர கதவடைப்பை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்புக்குப் பின் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதை தினம் தினம் நடைபெறும் குற்ற செயல்கள் நிரூபிக்கின்றன. அரச இயந்திரம், இவ்வாறான குற்றங்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்காமையே, இக் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைகின்றன. Read more

sdsகாணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை வெளியிடக்கோரி, வவுனியாவில் இடம்பெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மேற்கொள்ளப்படுகின்றது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உறவினர்கள், மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம், 4 ஆவது நாளாகத் இன்றையதினமும் தொடர்கின்றது.

qwqஇலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான, பணியகம், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றுகாலை 10.30மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பணியகத்தை திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

auto societyகாணாமல் போனோரின் உறவினர்களால்வ வுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து,

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா குடியிருப்பில் இருந்து இன்றுகாலை ஆரம்பமான குறித்த பேரணி, வவுனியா நகருக்கு சென்று, பின்னர் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றுவரும் பிரதான தபாலக முன்றலுக்குச் சென்றது.

indo lanka forign ministersஇலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்ட தரன்ஜித் சிங் சந்து, நேற்றையதினம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தரன்ஜித் சிங் சந்து நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது நியமனப் பத்திரங்களை கையளித்து, முறைப்படி இலங்கைக்கான தூதுவராக பதவியேற்றுக் கொண்டிருந்தார். இந்நிலையிலேயே நேற்று அவர் வெளிவிவகார அமைச்சரை முதல்முறையாக சந்தித்து பேச்சுக்களை நடத்தினார். Read more

sdds (2)இந்தியாவின் 68வது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்திலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போதுஇந்திய துணைத்தூதுவர் இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் தமிழ் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மாணவர்கள், எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.