இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான, பணியகம், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றுகாலை 10.30மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பணியகத்தை திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.