காணாமல் போனோரின் உறவினர்களால்வ வுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து,
வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா குடியிருப்பில் இருந்து இன்றுகாலை ஆரம்பமான குறித்த பேரணி, வவுனியா நகருக்கு சென்று, பின்னர் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றுவரும் பிரதான தபாலக முன்றலுக்குச் சென்றது.