indo lanka forign ministersஇலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்ட தரன்ஜித் சிங் சந்து, நேற்றையதினம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தரன்ஜித் சிங் சந்து நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது நியமனப் பத்திரங்களை கையளித்து, முறைப்படி இலங்கைக்கான தூதுவராக பதவியேற்றுக் கொண்டிருந்தார். இந்நிலையிலேயே நேற்று அவர் வெளிவிவகார அமைச்சரை முதல்முறையாக சந்தித்து பேச்சுக்களை நடத்தினார். இதில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரியவருகிறது. சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் தொடர்பான விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக, புதிய இந்தியத் தூதுவருடன் பேச்சு நடத்துவதற்காக அரசாங்கம் காத்திருந்த நிலையிலேயே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.