Posted by plotenewseditor on 27 January 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 27 January 2017
Posted in செய்திகள்
பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் “கல்வியால் எழுவோம்” செயற்றிட்டம் -08 தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில், சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய அதிபர் திரு சசிக்குமார் தலைமையில் நேற்று முன்தினம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வவுனியா நகர சபையின் முன்னைநாள் உபநகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய கௌரவ க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் தனது உரையில் தெரிவிக்கையில், Read more
Posted by plotenewseditor on 27 January 2017
Posted in செய்திகள்
இன்று எமது புலம்பெயர் உறவான ஜேர்மனி நாட்டை சேர்ந்த 30000 ரூபா பெறுமதியான புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. பாரதி இல்ல பெண்கள் சிறுவர் இல்லத்தால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்க்கு தமது இல்ல சிறார்கள் 102 பேருக்கு எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புத்தாடைகளை வழங்கி அவர்களும் எல்லோரையும் போன்று புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஒத்துழைப்பு தருமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இப் புத்தாடைகளை பொன்ராசா குலசிங்கம் அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின்னூடாக அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.
கடந்த மாதம் 19ம் திகதி ஜெயசுந்தர் கலைவாணி தம்பதிகளினால் 30000 ரூபா பெறுமதியான 22 சிறார்களுக்கான புத்தாடைகள் வழங்கி வைத்துள்ளதை தொடர்ந்து இன்று ஜேர்மன் நாட்டை சேர்ந்த குலசிங்கம் அவர்களால் 20 சிறார்களுக்கான புத்தடைகள் அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளதுடன். Read more
Posted by plotenewseditor on 27 January 2017
Posted in செய்திகள்
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆதரவில் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட உணவுகூட திறப்புவிழா நேற்று (26.01.2017) பாடசாலையின் அதிபர் திருமதி. சத்தியபாமா தர்மராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் திருமதி. குமாரதாசன் ஆனந்தி (உதவிக்கல்விப்பணிப்பாளர்-வழிகாட்டலும் ஆலோசனையும்- தீவக கல்வி வலயம்), புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியப் பொருளாளர் திருமதி. சுலோசனாம்பிகை தனபாலன், புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிற்றுவித்த யாழ் ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியையும், புங்குடுதீவு தாயகம் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவருமான செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமார் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர். Read more
Posted by plotenewseditor on 27 January 2017
Posted in செய்திகள்
பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற நிலையில் விடுதலையான முன்னாள் போராளிகள், அவர்களின் தேவையின் நிமித்தம் வெளிநாடு செல்ல விரும்புவார்களாயின், அதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் மேற்கொள்ளத் தயாராக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் மூவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட, புனர்வாழ்வுத் திணைக்கள வன்னிப் பிரிவுப் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.ஹெமிடோன், உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர், இதுவரையில் புனர்வாழ்வுபெற்று, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
Posted by plotenewseditor on 27 January 2017
Posted in செய்திகள்
“காணாமல் போனோர் தொடர்பாக ஓர் அலுவலகத்தை ஆரம்பிக்க சட்டம் உருவாக்கினோம். அதற்கமைய, அந்த அலுவலகத்தை மிக விரைவில் ஆரம்பிக்க முடியும். ஆனால், அந்தச் சட்டத்தில் ஜே.வி.பி ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.
அதனைச் செயற்படுத்திய பின்னர், அந்த அலுவலகத்தை திறக்கமுடியும்” என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். “இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில், கடந்த யுத்தத்தில் இடம்பெற்றதாககக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளையும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்” என்றும் அவர் கூறினார். Read more
Posted by plotenewseditor on 27 January 2017
Posted in செய்திகள்
அரச பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை,
தொடர்ந்து 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, ஜாலிய விக்கிரமசூரிய சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைக்க பிணை மனுக் கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 27 January 2017
Posted in செய்திகள்
முல்லைத்தீவு, கேப்பாப்புலவின் பிரதான வீதி பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட வேண்டுமென கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேப்பாப்புலவு காணி முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கரைதுரைப்பற்று பிரதேச செயலர் சி.குணபாலன் கலந்துரையாடினார்.
இதன்போதே மக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமது கிராமத்தின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். கேப்பாப்புலவில் இருந்து புதுக்குடியிருப்புச் செல்லும் பிதான பாதையினை இராணுவத்தினர் தடை செய்து வைத்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 27 January 2017
Posted in செய்திகள்
கடந்த வருடம் நடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் போது வெற்றி பெற்ற இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதல் நாள் பாராளுமன்ற அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற த்தின் மாவட்ட தலைவர் மகேஷ் பெர்னான்டோ தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. குறித்த அமர்வானது இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவூட்டும் வேலைத்திட்டத்தின் கூடிய செயலமர்வாக அமைந்திருந்தது. நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து சிறப்பித்திருந்தார்
Posted by plotenewseditor on 27 January 2017
Posted in செய்திகள்
கொழும்பு மெகசின் மற்றும் அநுராதபுர சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரவுடன் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துசார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 57 பேரும், அநுராதபுர சிறைச்சாலையில் 19 பேருமே தமது உண்ணாவிரதத்தை நேற்றையதினம் இரவுடன் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் இன்று முதல் அவர்கள் உணவு உண்ணுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் துசார உப்புல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.