கொழும்பு மெகசின் மற்றும் அநுராதபுர சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரவுடன் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துசார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 57 பேரும், அநுராதபுர சிறைச்சாலையில் 19 பேருமே தமது உண்ணாவிரதத்தை நேற்றையதினம் இரவுடன் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் இன்று முதல் அவர்கள் உணவு உண்ணுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் துசார உப்புல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.