sfdfdfdசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆதரவில் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட உணவுகூட திறப்புவிழா நேற்று (26.01.2017) பாடசாலையின் அதிபர் திருமதி. சத்தியபாமா தர்மராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் திருமதி. குமாரதாசன் ஆனந்தி (உதவிக்கல்விப்பணிப்பாளர்-வழிகாட்டலும் ஆலோசனையும்- தீவக கல்வி வலயம்), புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியப் பொருளாளர் திருமதி. சுலோசனாம்பிகை தனபாலன், புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிற்றுவித்த யாழ் ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியையும், புங்குடுதீவு தாயகம் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவருமான செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமார் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.இதன்போது புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிற்றுவித்த யாழ் ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியை செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமார் அவர்களினால், மேற்படி பாடசாலைக்கான “உணவுகூடம்” திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வின்போது, புங்குடுதீவு றோ.க.த.க. பாடசாலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான “அன்பு வெளியீடு” பயிற்சிப் பரீட்சைக்காக 20 பிள்ளைகளுக்கான செலவுத் தொகையை அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகள் ஞாபகர்த்தமாக “புங்குடுதீவு தாயகம் அமைப்பினர்” வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????