16326069_1091848884275566_1585733666_oவவுனியாவில் இளைஞர்களால் காணாமல் போன மற்றும் அரசியல் கைதிகளின் விடிவிற்கான இறுதித் தீர்மானத்தை நல்லாட்சி அரசு வெளியிட வேண்டும் என்று இளைஞர்கள் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து நேற்றுமாலை 4.00 மணியளவில் அமைதிப்பேரணியினை ஆரம்பித்து வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரத திடலின் முன்றலில் நிறைவு பெற்றது.

இளைஞர்களின் அமைதி பேரணியில் ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்க இருந்த நிலையில், உண்ணாவிரத போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவாண் விஜேவர்த்தன அவர்களின் வருகை மற்றும் அவர் வழங்கிய உறுதிமொழியையடுத்து நிறுத்திக் கொள்ளப்பட்டது. இளைஞர்களின் மகஜரில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

“முப்பது வருடகால அகிம்சைப்போர், முப்பது வருடகால ஆயுதப்போர் அதனைத்தொடர்ந்து மகிந்த அரசின் தமிழர்கள் மீதான அடக்கு முறையென இந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான எமது உறவுகள் காணாமலும், அரசியல் கைதிகளாகவும் மாறி மாறி வந்த அரசுகளின் தலைமையில் அரங்கேறியுள்ளது.

நல்லாட்சி அரசின் இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததும் தேசிய கட்சிகள் இணைந்து நடைபெறும் ஆட்சியில், தமிழர்களினால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராமுகத்துடன் செயற்படுவது இளைஞர்கள் ஆகிய எமக்கு மன வேதனையும், அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது.

எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் எமது விடுதலைக்காக இளம் வயதில் தமது உணர்வுகளை இனத்தின் விடிவுக்கான பாதையில் பயணித்த எமது முதல் தலைமுறையினை இழந்து தவிக்கும் ஓர் இனத்தின் அடுத்த தலைமுறை இளைஞர்களாகிய நாங்கள், எமது உறவுகளின் உண்மைத்தன்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக இங்கு ஒன்று கூடினோம்.
இளைஞர்கள் ஆகிய நாங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள தங்களிடம் முன் வைக்கும் நிபந்தனைகள்

1- காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அரசு விரைவான தீர்வினை தர வேண்டும்.
2- தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
3- பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்கப்படல் வேண்டும்.
யுத்தத்தால் கைது செய்யப்பட்டஃ காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளைத் தேடி எமது உறவுகள் மேற்கொள்ளும் அடையாள உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக நாமும் இணைந்து குரல் கொடுக்க வேண்டியது எமது தலையாய கடமை.

எனவே எமது கோரிக்கைகளுக்கு நால்லாட்சி அரசு ஓர் தீர்வினை வழங்க வேண்டும் என இளைஞர்கள் சார்பாக கோரி நிற்கின்றோம்”
நன்றி- என வவுனியா மாவட்ட இளைஞர்கள் தமது ஜனாதிபதிக்கான மகஜரில் குறிப்பிட்டிருந்தார்கள்.

16325674_1091848477608940_507164481_o 16326049_1091848954275559_853990568_o 16326108_1091848484275606_718790078_o 16326533_1091850660942055_1201450974_o