லண்டன் நாட்டில் உள்ள PATH TO THE FUTURE (எதிர்காலத்திற்கான பாதை) என்ற அமைப்பினரால் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள உயிரிழை அமைப்பினருக்கு இயன் மருத்துவ சிகிச்சைக்காக physiotherapy bed அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது.
யுத்தத்தினால் கழுத்து மற்றும் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 170 அங்கத்தவர்களை ஒன்றினைத்து செயற்படும் அமைப்பான உயிரிழை அமைப்பு வட்டுக்கோட்டை இந்த வாலிபர் சங்கம் ஊடாக லண்டன் நாட்டில் உள்ள PATH TO THE FUTURE என்ற அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து அவ் அமைப்பினால் இயன் மருத்துவ சிகிச்சைக்கான கட்டில் ஒன்றை லண்டனில் தருவித்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக உயிரிழை அமைப்பின் காரியாலயத்தில் வைத்து அதன் இணைப்பாளர் சிறீகரன் அவர்களிடம் வழங்கி வைக்கபட்டுள்ளது. Read more