நேற்று இடம்பெற்ற பாரிய விபத்தொன்றின் காரணமாக, கேகாலையில் அமைந்துள்ள போகல சுரங்க அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுரங்கத்தின் மீது மலையொன்று சரிந்து விழுந்தபோது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தின்போது, போகலப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேராதனைப் பொலிஸார், மேலுதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.