விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் நேற்று (30.01.2017) திங்கட்கிழமை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் வவுனியா முருகனூரைச் சேர்ந்த திருமதி லலிதா சிறீபாலன் என்பவரது வீட்டின் கூரையினை வேய்வதற்காக ஒரு தொகுதி கிடுகுகளை வழங்கிவைத்துள்ளனர். குறித்த வீட்டின் கூரைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் தற்போதைய மழையின் காரணமாக அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில் மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவி வழங்கும் நிகழ்வு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரும், வவுனியா மாவட்ட அமைப்பாளருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் தேசிய அமைப்பாளர் த.யோகராஜா, கட்சியின் செயற்குழு உறுப்பினர் சு.காண்டீபன் அகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. கட்சியின் ஜேர்மன் கிளையினர் புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் 2016ஆம் ஆண்டில் செய்துவந்த உதவிகளின் தொடர்ச்சியாக இவ்வருடத்தின் முதலாவது நிகழ்வாக மேற்படி உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.