Header image alt text

kannan

தோழர்: தர்மரட்ணம் யூட் புஸ்பசீலன் (கண்ணன்)

யாழ் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட தோழர் கண்ணன் அவர்கள் 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை கனடா ரொறன்ரோவில் இயற்கை எய்தினார் என்ற துயர் செய்தியை மிகுந்த துயருடன் நண்பர்கள், தோழர்கள், உறவுகளுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரது பூதவுடல் வெள்ளிக்கிழமை (27.01.2017) மாலை: 5:00 – 9:00 மணிவரை Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T என்ற முகவரியில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் சனிக்கிழமை (28.01.2017) காலை நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

plote

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

dfdfdஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரை நேற்று இரவு யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று வாகனமொன்றில் ஆடு வாங்குவதற்காக அந்த பகுதியில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

r3மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக 2,834 குடும்பங்களைச் சேர்ந்த 10,010 பேர் பாதிக்கபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரவிக்கின்றன.

கிரான் – தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை திகிலிவட்டை, பெரில்லாவெளி, குடும்பிமலை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2,155 குடும்பங்களைச் சேர்ந்த 7,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிரான் – புலிபாய்ந்தகல் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதால் பிரதேச செயலக ஊழியர்கள் படகு மூலம் தமது சேவையை முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

deadதெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பிரதேசத்தின் இருவேறு பகுதிகளிலிருந்து இரண்டு சடலங்கள், இன்று காலை 7.15மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படோவிட்ட பிரதேசத்துக்கு அருகில் உள்ள லேக்சைட் ஹோட்டலுக்கு பின்புறமாக உள்ள கால்வாயிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, அந்த ஹோட்டலின் முன்புறமாகவுள்ள படோவிட்ட பாலத்துக்கு அருகில், கால்வாயில் இருந்து மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. Read more

governmentபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய பாதுகாப்புச் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தேசிய பாதுகாப்புப் பிரிவு பிரதானிகளுடன் இடம்பெற்ற நீண்ட பல கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இதுவரையின் 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பிலும் 1978ஆம் அரசியல் யாப்பிலும் பிரித்தானியர்கள் அறிமுகம் செய்த பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் அமைந்த பயங்கரவாதத் தடைச்சட்டமே காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த பயங்கரவாத அடிப்படைச் சட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்த பிரித்தானியாவிலும் கூட தற்போது, நவீன காலத்திற்கு ஏற்ப அது மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Kaalimuththu

IMG_2031பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் “கல்வியால் எழுவோம்” செயற்றிட்டம் -08 தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில், சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய அதிபர் திரு சசிக்குமார் தலைமையில் நேற்று முன்தினம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வவுனியா நகர சபையின் முன்னைநாள் உபநகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய கௌரவ க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் தனது உரையில் தெரிவிக்கையில், Read more

j3 (1)இன்று எமது புலம்பெயர் உறவான ஜேர்மனி நாட்டை சேர்ந்த 30000 ரூபா பெறுமதியான புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. பாரதி இல்ல பெண்கள் சிறுவர் இல்லத்தால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்க்கு தமது இல்ல சிறார்கள் 102 பேருக்கு எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புத்தாடைகளை வழங்கி அவர்களும் எல்லோரையும் போன்று புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஒத்துழைப்பு தருமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இப் புத்தாடைகளை பொன்ராசா குலசிங்கம் அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின்னூடாக அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.

கடந்த மாதம் 19ம் திகதி ஜெயசுந்தர் கலைவாணி தம்பதிகளினால் 30000 ரூபா பெறுமதியான 22 சிறார்களுக்கான புத்தாடைகள் வழங்கி வைத்துள்ளதை தொடர்ந்து இன்று ஜேர்மன் நாட்டை சேர்ந்த குலசிங்கம் அவர்களால் 20 சிறார்களுக்கான புத்தடைகள் அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளதுடன். Read more

sfdfdfdசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆதரவில் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட உணவுகூட திறப்புவிழா நேற்று (26.01.2017) பாடசாலையின் அதிபர் திருமதி. சத்தியபாமா தர்மராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் திருமதி. குமாரதாசன் ஆனந்தி (உதவிக்கல்விப்பணிப்பாளர்-வழிகாட்டலும் ஆலோசனையும்- தீவக கல்வி வலயம்), புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியப் பொருளாளர் திருமதி. சுலோசனாம்பிகை தனபாலன், புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிற்றுவித்த யாழ் ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியையும், புங்குடுதீவு தாயகம் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவருமான செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமார் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

former LTTEபாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற நிலையில் விடுதலையான முன்னாள் போராளிகள், அவர்களின் தேவையின் நிமித்தம் வெளிநாடு செல்ல விரும்புவார்களாயின், அதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் மேற்கொள்ளத் தயாராக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் மூவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட, புனர்வாழ்வுத் திணைக்கள வன்னிப் பிரிவுப் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.ஹெமிடோன், உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர், இதுவரையில் புனர்வாழ்வுபெற்று, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.