weதமது காணிகளை முழுமையாக விடுவிக்க வேண்டும் என, கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக, நேற்று முதல், தொடர்ச்சியான போராட்டத்தில், கேப்பாப்புலவு மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், அம்மக்களை நேற்றுச் சந்தித்துள்ளனர். இதன்போது, காணிகள் முழுமையாக விடுவிக்கப்படுவது தொடர்பில் உரிய பதிலை வழங்க இரு வார கால அவகாசத்தை மக்களிடம் கோரியிருந்தனர். ஆனால், உரிய பதில் வழங்கப்படும்வரை, போராட்டத்தை தாம் கைவிடப்போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, இராணுவத்தினருடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் கலந்துரையாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.