policeயாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் நேற்று முன்தினம் யாழ்.அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ். மாவட்டத்தில் குறிப்பாக நகரப் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 18 வயது மற்றும் 21 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வியை தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 வாள்கள், 2 கை கோடாரிகள், மற்றும் 1 கைதொலைபேசி, மற்றும் 1 முகமூடி போன்றன பொலிஸாரால் மீட்டுள்ளன.
மேலும் கைப்பற்றப்பட்ட வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் தலைகவசம் ஆகியவற்றில் இரத்த கறை காணப்படுவதுடன், சிறிய கை கத்தி (இராணுவ தேவைகளுக்கு பயன்படும் கத்தி) ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யபபட்டவர்கள் இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.